25வது நாளை கொண்டாடிய பைசன் | மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா | மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம் | கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா | பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல் | நடிகையானதை தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட விஸ்மாயா மோகன்லால் | முதன்முறையாக தமிழில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கும் 'அன்கில் 123' | தீவிர மருத்துவ சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா : உடல்நிலையில் முன்னேற்றம் என மகள் தகவல் | ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் |

10 ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த, கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 1983 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அப்ரிட் ஷைன். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றி பெற்றதால், அடுத்ததாக 2016ல் மீண்டும் நிவின்பாலி நடிப்பில் 'ஆக்ஷ்ன் ஹீரோ பைஜூ' என்கிற வித்தியாசமான போலீஸ் படத்தையும் இயக்கினார் அப்ரிட் ஷைன். வழக்கமான அதிரடி போலீஸ் படங்கள் போல அல்லாமல் ஒரு நகரத்தில் அன்றாடம் நடக்கும் குற்றங்களும் அவற்றின் மீது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளும் என புதிய பாணியில் கதை சொல்லியிருந்தார்கள். நிவின்பாலியே தயாரித்திருந்தார்
இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகளை தொட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் படத்தின் நாயகன் நிவின்பாலி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே இயக்குனரின் டைரக்சனில் நிவின்பாலி நடித்த மகாவீர்யர் திரைப்படம் சரியாக போகாத நிலையில் மீண்டும் அவரது டைரக்சனிலேயே நிவின்பாலி இந்த படத்தை அறிவித்திருப்பது ஆச்சரியம் தான்.




