கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
மோகன்லால், ஜீத்து ஜோசப் என்கிற வெற்றி கூட்டணியின் அடுத்த படமாக உருவாகியுள்ளது 'நேர்'. நீதிமன்றத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் இன்று டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபக் உன்னி என்கிற கதாசிரியர் நேர் படத்தின் கதை என்னுடையது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுபற்றி அவர் மனுவில் கூறும்போது, “இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் இணை எழுத்தாளர் சாந்தி மாயா தேவியும் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் மூன்று வருடங்களுக்கு முன்பு என்னை சந்தித்தபோது 49 பக்கங்கள் அடங்கிய இந்த கதையின் காப்பியை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பெற்றுக் கொண்டனர். பின்னர் படத்திலிருந்து என்னை நீக்கியும் விட்டனர். சமீபத்தில் 'நேர்' படத்தின் ட்ரெய்லர் காட்சிகளை பார்த்த போதுதான் இது என்னுடைய கதை என்பதை தெரிந்து கொண்டேன். அதனால் நேர் படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், இயக்குனர் ஜீத்து ஜோசப் ஆகியோருக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதே சமயம் படத்தின் ரிலீஸ் தேதிக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.