ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் வைசாக். மம்முட்டி, பிரித்விராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கிய வைசாக் அதற்கு அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் புலி முருகன் என்கிற வெற்றி படத்தை கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தார். அதேசமயம் மீண்டும் போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாக மம்முட்டியை வைத்து மதுர ராஜா என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் தோல்வியை தழுவியது.
அதன்பிறகு கடந்த வருடம் மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படமும் தோல்வியை தழுவியதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளானது. இந்த நிலையில் இவர் மீண்டும் மம்முட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது அந்த படத்திற்கு டர்போ என பெயரிடப்பட்டு பூஜையுடன் துவங்கியுள்ளது. அடுத்த நூறு நாட்களுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்” என வைசாக் கூறியுள்ளார்.