நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கின் முன்னணி நடிகர் நிகில். இவர் நடித்த 'கார்த்திகேயா' படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது நிகில் நடிக்கும் 20வது படத்திற்கு 'சுயம்பு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை பிக்சல் ஸ்டுடியோ சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார். ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நிகில் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். 'விருபாக்ஷா' படத்திற்கு பிறகு சம்யுக்தா நடிக்கும் படம் இது. இதுதவிர 'டெவில்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். 'வாத்தி' படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
சுயம்பு படம் நிகிலின் கேரியரில் அதிக பொருட்செலவில் உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. பேண்டசி கதையாக இது உருவாகிறது. ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.