நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, மலையாளத்தில் தியான் மற்றும் தமிழில் ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் ஆகிய படங்களை இயக்கிய ஜிஎன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
மோகன்லால் நடித்த லூசிபர் மற்றும் தற்போது அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் எம்புரான் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் படத்தின் மூலம் அழகிய லைலாவாக கவனம் ஈர்த்த நிகிலா விமல் முதன்முறையாக ஆர்யாவுடன் இந்த படத்திற்காக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.