300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கடந்த ஆக., 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானது. இதற்கு ஒரு நாள் கழித்து ஆகஸ்ட் 11ம் தேதி (நேற்று) சிரஞ்சீவி நடிப்பில் உருவான போலா சங்கர் திரைப்படம் வெளியானது. தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் ஆக உருவாகி உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
நேற்று வெளியான இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே சற்று நெகட்டிவான விமர்சனங்கள் தான் வெளியாகி வந்தது. அதே சமயம் சிரஞ்சீவியின் நடிப்பிற்கு பாராட்டுகளும் குவிந்து வந்தது. இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் பாபட்லாவில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு சென்ற போலீசார் அங்கு போலா சங்கர் திரைப்படத்தை திரையிட அனுமதி மறுத்தனர். அரசாங்கம் அனுமதித்த கட்டணத்தை விட அதிகாரப்பூர்வமற்ற முறையில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் அதனாலேயே போலா சங்கர் காட்சியை திரையிட அனுமதிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதே சமயம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் மீதுள்ள தனிப்பட்ட துவேசத்தை வெளிப்படுத்தும் விதமாக இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார் என சிரஞ்சீவி ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.