என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் |
த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'குண்டூர் காரம்'. இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிகா - ஹசைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட மாதங்களாக இடைவெளி விட்டு விட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே வெளியேறி அந்த இடத்திற்கு ஸ்ரீ லீலா வந்தார். இதையடுத்து இப்படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் வெளியேறி அவர் இடத்தில் ஒரு புதிய ஒளிப்பதிவாளர் வந்தார். இந்த நிலையில் சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இப்படத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள். இதையடுத்து இப்போது ராம் - லட்சுமணன் சண்டை இயக்குனர்கள் ஆக இப்படத்திற்கு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.