'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

முன்னணி மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. டிரைவிங் லைசென்ஸ், தி கிரேட் இண்டியன் கிச்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை பலமுறை பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதோடு பொது வெளியிலும் இவரது செயல்பாடு இருக்கும். எந்த அரசியல்கட்சியிலும் சேரவில்லை என்றாலும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை வெளியிடுவார்.
அந்த வகையில் மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். வன்கொடுமைக்கு எதிராக கேரளாவில் நடந்த சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக காக்கநாடு சைபர் கிரைம் போலீசில் சுராஜ் வெஞ்சாரமூடு புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், “எனக்கு செல்போனில் வெவ்வேறு எண்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. கடந்த 3 நாட்களாக வாட்ஸ் அப் மூலமாகவும் சம்பந்தமில்லாதவர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள். மணிப்பூர் பெண்களுக்கு ஆதரவாக பேசிய நீ கேரள மாநிலம் ஆலுவாவில் ஐந்து வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டு ஆபாசமாகவும் அவதூறாகவும் திட்டுகிறார்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுராஜ்வெஞ்சரமூடு வேகமாக கார் ஓட்டி ஒருவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.