ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஸ்வக்சென் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாஸ் கா தம்கி. இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். யுகாதி பண்டிகையை முன்னிட்டு நேற்று இந்த படம் ரிலீஸாகி உள்ளது. இந்தநிலையில் நேற்று விசாகப்பட்டணத்தில் உள்ள சுகன்யா என்கிற தியேட்டரில் காலை காட்சி திரையிடப்பட்டபோது இந்த படத்திற்கு பதிலாக ரவிதேஜா நடிப்பில் கடந்த வருடம் வெளியான தமாக்கா என்கிற படம் திரையில் ஓட துவங்கியது. புதிய படத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ரவிதேஜாவின் பழைய படம் திரையில் ஓட துவங்கியதும் கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர். உடனடியாக படம் நிறுத்தப்பட்டது.
தற்போது டிஜிட்டல் முறையில் படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படுவதால் கம்ப்யூட்டர் மானிட்டரில் தமாக்கா மற்றும் தாஸ் கா தம்கி ஆகிய படங்களின் ஆங்கில எழுத்துக்கள் சட்டென்று பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தெரிந்ததால் ஆபரேட்டர் தவறுதலாக தமாக்கா படத்தை கிளிக் செய்து விட்டதாக பின்னர் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் தாஸ்கா தம்கி திரைப்படம் திரையிடப்பட்டது.