'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
திரிஷ்யம், திரிஷ்யம் 2 படங்களின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்களை பெற்றவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். திரிஷ்யம் 2 படத்தை முடித்த பின்னர் மோகன்லாலை வைத்து ட்வல்த் மேன் என்கிற படத்தை ஓடிடியில் வெளியிட்டு அதிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றார் ஜீத்து ஜோசப். மேலும் ஏற்கனவே மோகன்லால், திரிஷா நடிப்பில் கொரோனா தாக்கத்திற்கு முன்னதாக தான் ஆரம்பித்த ராம் படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். அடுத்ததாக பிரித்விராஜை வைத்து படம் இயக்கவும் தயாராகி விட்டார்.
அதேசமயம் ட்வல்த் மேன் படத்தை முடித்ததும் ராம் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடர முடியாத சூழல் இருந்த சமயத்தில் தான், மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி என்பவரை ஹீரோவாக வைத்து கூமன் என்கிற படத்தை இயக்க துவங்கினார் ஜீத்து ஜோசப். இந்தப்படம் நாளை (நவ-4) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் டைட்டிலுடன் சேர்த்து தி நைட் ரைடர் என்கிற டேக்லைனுக்கு ஏற்ப இது இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது .
அதுமட்டுமல்ல இதுவரை முன்னணி ஹீரோக்களை மட்டுமே வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்த ஜீத்து ஜோசப் தற்போது இரண்டாம் நிலை ஹீரோ ஒருவரை வைத்து படம் இயக்கியுள்ளார் என்பதும் ஆச்சர்யமான விஷயம்.. இதுவரை கிட்டத்தட்ட 75 படங்கள் வரை நடித்துவிட்ட நடிகர் ஆசிப் அலி இந்தப்படம் மூலம் தனக்கு ஒரு கமர்ஷியல் பிரேக் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்.