பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் |
சால்ட் அண்ட் பெப்பர், பழசி ராஜா, சாவர், உண்டா, பிளாக் காப்பி உள்பட பல படங்களில் நடித்தவர் மலையாள சினிமாவின் மூத்த நடிகர் கேலு மூப்பன். 90 வயதான கேலு மூப்பன் வயது மூப்பு காரணமாக திரையுலகை விட்டு விலகி, வயநாடு அருகிலுள்ள மானந்தவாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அவர் காலமானார். அவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ரமா என்ற மகளும், மணி என்ற மகனும் உள்ளனர். கேலு மூப்பன் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேலு மூப்பன் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி பகுதியில் உள்ள குறிச்சியர் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவராக இருந்து அந்த மக்களுக்காக உழைத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.