2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் நேற்று 'நின்ன தான் கேஸ் கொடு' என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். ரதீஷ் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி உள்ளார். இவர் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தை இயக்கியவர். நேற்று குஞ்சாக்கோ போபன் படம் முதல் காட்சி முடிவடைந்து இரண்டாம் காட்சி தொடங்குவதற்கு உள்ளாகவே இந்தப்படத்தைப் பற்றிய எதிர்மறை பிரச்சாரங்கள் சோசியல் மீடியாவில் துவங்கிவிட்டன.
படம் நன்றாக இல்லை என யாருமே சொல்லவில்லை. அதேசமயம் இந்த படம் இப்போதைய ஆளும்கட்சியை கிண்டலடிக்கும் விதமாக தாக்கும் விதமாக இருக்கிறது என ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் இந்த படத்தை புறக்கணிக்குமாறு சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் குஞ்சாக்கோ போபனோ எந்த அரசையும் எதிர்த்து நாங்கள் படம் எடுக்கவில்லை. மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையை மையப்படுத்தியே இந்தப்படம் உருவாகி உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இந்த எதிர்ப்பே ப்ரீ பப்ளிசிட்டி ஆக மாறி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்து மாலை, இரவு காட்சிகளுக்கு தியேட்டர்களில் அதிக அளவு கூட்டத்தை அழைத்து வந்து விட்டது. குஞ்சாக்கோ போபன் படத்திலேயே முதல் நாள் வசூலிலும் பரபரப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படமாக இது இடம் பிடித்துவிட்டது என கேரள தியேட்டர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.