டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கில் கடந்த வெள்ளியன்று நானி, நஸ்ரியா நடிப்பில் அடடே சுந்தரானிக்கி என்கிற படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ள நடிகை நஸ்ரியா முதன் முறையாக இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். ரொமான்ஸ், காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் படம் பார்த்த பலரும் இந்த படத்தின் முதல் பாதி சற்று நீளமாக உள்ளது என்றும் சில காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம் என்றும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் விவேக் ஆத்ரேயா கூறும்போது, “முதல் பாதி நீளமாக இருக்கிறது என்றும் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நகர்கிறது என்றும் பலரும் என்னிடம் கூறினார்கள்.. முதல் பாகத்தின் சில காட்சிகளை வெட்டி விடுமாறு ஆலோசனையும் தந்தார்கள்.. இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக எடுக்கத் தெரிந்த எனக்கு, முதல் பாதியை அப்படி எடுக்க தெரிந்திருக்காதா ? ஆனால் அந்த படத்தில் இரண்டாம் பகுதியில் உள்ள காட்சிகளுடன் இணைக்கும் முக்கிய காட்சிகள் முதல் பாகத்தில் இருக்கின்றன. குறிப்பாக குழந்தைப்பருவ காட்சிகள். அவற்றை வெட்டி விட்டால் படத்தின் ஜீவனே போய்விடும்.. அதை நான் செய்ய மாட்டேன்” என்று கூறியுள்ளார்




