பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் |

கடந்த மாதம் 14ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப். தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. 1200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ யஷ் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், நடித்துள்ளார். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று கர்நாட மாநில உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் படத்தை தடை செய்ய முடியாது என்று கூறி மனுவை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்தது.