கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

ஜோக்கர் படம் மூலம் வித்தியாசமான கெட்டப் மற்றும் மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களிடம் மிக எளிதில் அறிமுகமானவர் நடிகர் குரு சோமசுந்தரம். இதைத் தொடர்ந்து மலையாளத்திலும் குரு சோமசுந்தரத்தை தேடி வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்படி அவர் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்த மின்னல் முரளி என்கிற படம் மலையாள ரசிகர்களிடமும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் பிசியான நடிகராக மாறி உள்ளார் குரு சோமசுந்தரம்.
இந்நிலையில் இந்திரா என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆஷா சரத் நடிக்கிறார். வினு விஜய் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. மின்னல் முரளி படத்தில் குரு சோமசுந்தரம் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தது போல சமீபத்தில் வெளியான அந்தாக்ஷரி என்கிற படத்தில் ஆஷா சரத்தும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.