சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். ஆயுர்வேத மருத்துவர், தொல்லியல் பொருட்கள் சேகரிப்பாளர். தனது வீட்டில் பழமை வாய்ந்த பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகமும் வைத்துள்ளார். திப்பு சுல்தானின் கிரீடம் முதல், இயேசு அணிந்த உடை வரை தன்னிடம் இருப்பதாகக் கூறி பலரை நம்ப வைத்துள்ளார்.
புருனே சுல்தான் கிரீடத்தை விற்றதாகவும், அதில் வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் கோடி வர உள்ளதால், அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறி, 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் வீட்டுக்கு திரை நட்சத்திரங்கள் உட்பட பல விஐபிகள் வந்துள்ளனர். மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலும் இவருடைய கலூர் வீட்டுக்குச் சென்றுள்ளார். மோகன்லால் பழங்கால புராதன பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், தனது வீடுகளில் பல அரிய புராதன பொருட்களை வாங்கி வைத்துள்ளார். அந்த வகையில் மோகன்லாலுக்கு மோன்சனுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
மோன்சனின் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை மோகன்லாலிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறது. இதற்காக அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி மோகன்லாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது மலையாள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.