லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஸ்பைடர் படத்தின் தோல்விக்கு பிறகு மகேஷ்பாபு அடுத்தடுத்து நடித்த மூன்று படங்களும் வரிசையாக ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் நடிகர் மகேஷ்பாபு. இந்த நிலையில் அடுத்ததாக இவர் நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பரசுராம் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஆனால் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் பிரமித்துப் போய் இருக்கிறார்களாம். குறிப்பாக படத்தின் முதல் பாதி பிளாக்பஸ்டர் என்றும், கிளைமாக்ஸ் அல்டிமேட் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு படி மேலே போய் ஒக்கடு, போக்கிரி, தூக்குடு படங்களைத் தொடர்ந்து அந்த பட்டியலில் அடுத்ததாக இந்த சர்க்காரு வாரி பாட்டா இடம் பிடிக்கும் என்றும் அவர்கள் படத்தைப் பாராட்டி உள்ளார்களாம். இதனால் படக்குழுவினர் ரொம்பவே உற்சாகமாக இருக்கின்றனர்.