பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார். அதன்பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்து வரும் சில அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்ததாக சில மாதங்களுக்கு முன் திலீப் மீது புதிய வழக்கு பதியப்பட்டது.. இந்த வழக்கில் நீண்டநாள் போராடி முன் ஜாமின் பெற்றார் திலீப்.
அதுமட்டுமல்ல, தன்மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியப்பட்ட இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புதிய மனு ஒன்றை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் திலீப். இந்தநிலையில் நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது சிபிஐ வசம் மாற்றவோ வாய்ப்பில்லை என கூறி திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் திலீப் இந்த வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டி, சபரிமலை சென்று வழிபட்டு வந்த நிலையில், அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.