ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் தனது திருமண முறிவு குறித்து அறிவித்தார் நடிகை சமந்தா. ஆனால் அதன்பின் தன்னை பற்றியும் தனது கணவருடனான விவாகரத்து குறித்தும் அவதூறு பரப்பும் விதமாக செய்திகள் வெளியிட்டதாக சில யூட்யூப் சேனல்கள் மீது போலீசில் புகார் அளிதததுடன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார் நடிகை சமந்தா.
இந்தநிலையில் சமீபத்தில் தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்று அதில் நடிகர் பிரகாஷ்ராஜை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள விஷ்ணு மஞ்சு சமந்தா விவகாரத்தை தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விரைவில் யூட்யூப் நிறுவன உரிமையாளர்களையும் அழைத்து தங்கள் சட்ட ஆலோசனை குழுவுடன் சேர்ந்து இதுகுறித்த கலந்துரையாடல் ஒன்றையும் நடத்த உள்ளாராம் விஷ்ணு மஞ்சு.