காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
பிரபல தெலுங்கு குணசித்ர நடிகர் ராஜபாபு. ஐதராபாத்தில் வசித்து வந்த ராஜபாபுவுக்கு கடந்த சில நாட்களாக, உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவருடைய மறைவிற்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜபாபு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரபுபேட்டாவைச் சேர்ந்தவர். 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மற்றும் ஜெயபிரதா நடித்த ஊரிக்கு மோனகாடு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 60க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர மற்றும் காமெடி வேடங்களில் நடித்தார்.
வெங்கடேஷ், மகேஷ்பாபு நடித்த சீதம்மா வாகிட்லோ ஸ்ரீமல்லே செட்டு, மகேஷ்பாபுவின் பிரம்மோத்சவம், வெங்கடேஷ், த்ரிஷா நடித்த ஆடவரி மாட்லாக்கு அர்த்தலே வேருலே, சமுத்திரம், மல்லி ராவா போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். 2005 ஆம் ஆண்டு அம்மா என்ற தொடரில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றார்.