நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகை சன்னி லியோன் இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் நடிகையாக விளங்குகிறார். ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன், தற்போது அதிலிருந்து வெளியேறி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
தற்போது ஒரு சில படங்களில் பாடல்களில் மட்டும் நடித்து வருகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சன்னி லியோனுக்கு எண்ணற்ற ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீபத்தில் 40 வயதை எட்டிய சன்னி லியோன் இப்போதும் இளமையாக இருக்கிறார்.
சன்னி லியோன் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். நீச்சல் உடையில் ஊஞ்சல் மேல் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் சன்னி லியோன், 'எனக்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் காலியாக உள்ளது, என்னுடன் ஊஞ்சலாட யார் வருகிறீர்கள்? என்ற கேள்வியையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து, கமெண்ட் செய்து வருகிறார்கள்.