ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட் நடிகர் சல்மான்கானை பொறுத்தவரை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர். அதேசமயம் சில நேரங்களில் தனது செயல்களால் ஆச்சர்யப்பட வைப்பவரும் கூட.. ஆனால் அவரைப்போல வெளிப்படையாக பேசக்கூடிய நபரை பார்ப்பதே ஆச்சர்யமாக இருக்கிறது என பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.. ஆம் புட்டபொம்மா பாடல் மூலம் பாலிவுட்டிலும் பூஜா ஹெக்டேவின் புகழ் பரவவே அதன் பயனாக தற்போது சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பைஜான் படப்பிடிப்பில் சல்மான்கானுடன் பழகிய அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “சில மனிதர்கள் தங்களுக்கென முகமூடி அணிந்து கொண்டே பழகுவார்கள்.. ஆனால் சல்மான் கான் எப்போதும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என வெளிப்படையாக பேசக்கூடியவர், சிறந்த ஆளுமை கொண்டவர்.. அவர் அவராகவே இருக்கிறார். அவரைப்போல இப்படிப்பட்ட உயரத்தில் இருக்கும் ஒரு மனிதர் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெருமையான விஷயம்” என புகழ்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.