‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி, அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஷெர்லின் சோப்ரா விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு மும்பை போலீசின் சைபர் குற்றப்பிரிவின் முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விசாரணையில் இருந்து விலக்கு கேட்டு ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே ஆபாச பட விவகாரத்தில் ஷெர்லின் சோப்ராவின் பங்கு என்ன என்று பாலிவுட் வட்டராங்கள் பரபரப்பாகி உள்ளன.
ராஜ் குந்த்ராவிடம் பணிபுரிந்த அரவிந்த் ஸ்ரீவத்சவா என்பவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் 90க்கு மேற்பட்ட ஆபாச படங்களை பரப்பி உள்ளதாகவும், ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இவர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன. அரவிந்தின் வங்கி கணக்கில் இருந்த 3 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.