12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகை கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் இரண்டாவது குழந்தை ஜெஹ் க்குத் தாயானார். முதல் குழந்தை தைமூர் அலிகான். கரீனா கபூர் கர்ப்பமாக இருந்த போது தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்தும், சவால்கள் குறித்தும் 'பிரக்னன்சி பைபிள் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த புத்தகம் கடந்த 9ந்தேதி வெளியிடப்பட்டது. அதனை விற்பனை செய்ய கரீனா கபூர் சமூகவலைதளத்தில் விளம்பரம் செய்து வருகிறார். புத்தகத்தை தனது 'மூன்றாவது குழந்தை' என்று கரீனா அழைத்து வருகிறார்.
இந்நிலையில், கரீனா கபூர் தான் எழுதிய புத்தகத்திற்கு வைத்திருக்கும் பெயர் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பைபிள் என்னும் பெயர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக புத்தகத்திற்குப் பெயர் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மராட்டிய மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத் தலைவர் ஆசிஷ் ஷிண்டே, இது தொடர்பாக பீட் நகரில் உள்ள சிவாஜி நகர் போலீசில் புகார் அளித்துளார்.
கரீனா கபூர் மற்றும் புத்தகத்தின் இணையாசிரியர் அதிதி ஷா ஆகியோருக்கு எதிராக போலீசில் புகார் அளித்து உள்ளார். புத்தகத்தின் பெயரில் இடம் பெற்றுள்ள வார்த்தையான பைபிள், கிறிஸ்தவர்களின் புனித நூலாக இருக்கிறது. ஆனால் கரீனா கபூர் தனது புத்தகத்திற்கு பைபிள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
புத்தகத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீதும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சாய்நாத் கூறும் போது புகார் வந்திருப்பது உண்மைதான். ஆனால் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை. மும்பையில் இது தொடர்பாக புகார் செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.