துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கொரோனா முதல் அலை வீசும்போது நடிகர்கள் பணமாக நிதி கொடுத்தபோதும் களத்தில் இறங்கி பல நடிகைகள் பணியாற்றினர். அதேபோன்று இப்போது இரண்டாவது அலையிலும் நடிகைகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கொரோனா 2வது அலை காலத்தில் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவளிப்பதற்காக ஒரு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இந்த அறக்கட்டளையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சிவானந்தன் மற்றும் ரோடி வங்கியும் இணைந்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை ஒரு கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நேரடியாகவே உணவு வழங்கி வருகிறார்.
இதேபோல ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தில் நடிகை பிரணிதி பணியை தொடங்கி விட்டார். தற்போது நடிகை சஞ்சனா கல்ராணியும் பொதுமக்களுக்கு உணவளிக்கும் பணியை தொடங்கி விட்டார். தினமும் 600 பேருக்கு உணவளிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். சஞ்சனா கல்ராணி போதை பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாத சிறைவாசத்திற்கு பிறகு சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.