'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். ஜெ. வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்க, எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
இதையடுத்து தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமும் ஹிந்தியில் தயாராகப் போகிறது. ஏக் அவுர் நரேன் என்று பெயரிப்பட்டுள்ள இந்த படத்தை வங்காள மொழி இயக்குனர் மிலன் பவுமிக் இயக்குகிறார்.
இவர் இதற்கு முன்பு டில்லியில் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிர்பயாவின் கதை, சியாம பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு கதைகளை படமாக எடுத்தவர். மேலும், ஏக் அவுர் நரேன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கும் இவர், பிரதமர் மோடியின் கதைக்குள், விவேகானந்தரைப் பற்றிய பயோபிக்கையும் இணைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரதமர் மோடியின் வேடத்தில் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்த கஜேந்திர சவுஹான் நடிக்கிறார்.