'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பாலிவுட் நடிகை அமிஷா படேல் மும்பையை சேர்ந்தவர். தமிழில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தாரே, அதே அமிஷா படேல் தான். சில தினங்களுக்கு முன் அகமதாபாத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இவருக்கு 'குஜராத்தின் உண்மையான கவுரவம்' என சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர்.
இவருக்கு வழங்கப்பட இந்த சான்றிதழை ரசிகர்கள் பலர் பார்க்க விரும்பியதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமிஷா படேல். அதேசமயம் தயாரிப்பாளர் அஜய் குமார் என்பவரிடம் 2.5 கோடி வாங்கிய அமிஷா படேல் அதை திருப்பி தரவில்லை என அவர் மீது தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதும், அதற்கு பிப்ரவரி மாதமே பதிலளிக்கும்படி ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டதும் தனிக்கதை. ஆனால் இந்த புகாரில் ஆதாரமில்லை என கூறியுள்ளார் அமிஷா படேல்.