ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் பாலிவுட் மீளவில்லை. இந்த நிலையில் அவரது நண்பரும் எம்.எஸ்.டோனி படத்தில் அவருடன் நடித்தவருமான சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானாவில் பிறந்த சந்தீப் நடிக்கும் ஆசையில் கடந்த 2009ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். 2016ம் ஆண்டு எம்.எஸ்.தோனி படத்தில் நடித்தார். தோனி படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ள தனது மனைவியின் டார்ச்சரே காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து மும்பை ஜார்ஜியா பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.