9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து டாக்ஸிக், ராமாயணா என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் யஷ். இதில் டாக்ஸிக் படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில் யஷ் உடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூயுமா குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கன்னடம், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வெங்கட் நாராயணாவுடன் இணைந்து யஷ் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிட்டதை அடுத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க பெங்களூருக்கு அலைய வைக்க வேண்டாம் என்று டாக்ஸிக் படப்பிடிப்பையே மும்பைக்கு மாற்றுமாறு கூறியிருக்கிறார் யஷ். இதனால் டாக்ஸிக் படத்தில் கியாரா அத்வானி நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள். இதேப்போல் ஹிந்தியில் தயாராகும் ராமாயணா என்ற படத்தில் ராவணனாக நடிக்கும் யஷ், அந்த படத்திலும் இணை தயாரிப்பாளராக செயல்பட்டு வருகிறார்.