மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் கடுமையான காட்டுத்தீ திடீரென பரவியது. இதில் பல உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்தை நேரில் இருந்து பார்த்ததுடன் அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியும் உள்ளார் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் பாலிவுட்டில் மட்டுமே அதிக அளவில் படங்கள் நடித்திருந்தாலும் மணிரத்தனத்தின் 'உயிரே' போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்தான். சமீபத்தில் இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று இருந்த போது தான் காட்டுத்தீ பரவலை நேரில் பார்த்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நாங்கள் இருந்த பகுதிக்கு மிக அருகில்தான் காட்டுத்தீ மளமள என பரவியபோது, நாளை என்கிற ஒரு நாளை மீண்டும் பார்ப்பேனா என்று என் மனதிற்குள் அச்சம் தோன்றியது. நண்பர்களும் அருகில் இருந்த குடும்பத்தினரும் சாம்பலின் தாக்கம், புகை ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக அங்குமிங்கும் ஓடினர். குழந்தைகளும் பெரியவர்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டனர். காற்றும் கூட அமைதி கொள்ளாமல் இதை தீவிரப்படுத்தியது. இந்த நிகழ்வை பார்த்து நான் ரொம்பவே மனம் நொறுங்கிப் போனேன். அதேசமயம் நாங்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.