தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‛கேம் சேஞ்ஜர்'. இந்த படம் முதல் நாளில் 186 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று இரண்டாம் நாளில் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகபடியாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் இந்த கேம் சேஞ்ஜர் படம் ஹிந்தியில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு கணித்ததை விட அதிகப்படியாக வசூலித்திருப்பதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து தில்ராஜு வெளியிட்டுள்ள செய்தியில், ‛பாலிவுட்டில் இந்த படம் முதல் நாளில் ஐந்து கோடியை விட குறைவாகத்தான் வசூலிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் இப்படம் பாலிவுட்டில் முதல் நாளில் 8.64 கோடி வசூலித்து இருக்கிறது. பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி அங்குள்ள ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அதனால் மூன்று நாட்களில் இந்த படம் ஹிந்தியில் 30 கோடி ரூபாய் வசூலிக்கும்' என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.