புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
மலையாள இளம் முன்னணி நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த டிசம்பர் 20ம் தேதி மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க வன்முறை மற்றும் அதிரடியான ஏழு சண்டை காட்சிகள் நிறைந்த ஏ சான்றிதழ் பெற்ற படமாக இது வெளியானாலும் கேரளாவில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
தற்போது ஒவ்வொரு மொழியாக இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹிந்தியிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அங்கே வெறும் 89 தியேட்டர்கள் மட்டுமே இந்த படத்திற்கு கிடைத்தன. அதுவும் வருண் தவான் நடித்த பேபி ஜான் ரிலீஸ் ஆனதும் அந்த எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.
ஆனால் அனிமல் படத்தைப் போல இந்த படம் ரொம்பவே ஆக்ரோஷமாக இருக்கிறது என்கிற ஒரு மவுத் டாக் சோசியல் மீடியா மூலமாக பரவியதன் மூலம் தற்போது இந்த படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கை 350-க்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட பேபி ஜான் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறியதும் மார்கோ படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிக்க காரணம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.