சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
பிரபல டிவி மற்றும் ஹிந்தி நடிகை ஏக்தா ஜெயின். ‛காளி பாலி, ஜிந்தகி ஷத்ரஞ்ச் ஹே' போன்ற படங்களிலும், பேமிலி நம்பர் 1, ஷாகுன் உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். நாடு முழுவதும் நவராத்திரி விழா களைகட்டி வரும் வேளையில் நடிகை ஏக்தா ஜெயின், துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை ஒரே நாளில் பிரதிபலித்தார்.
துர்கா தேவியின் வெவ்வேறு வடிவங்களை சித்தரித்து, ஒவ்வொரு தேவி வடிவத்தின் சாரத்தையும் கம்பீரத்தையும் பிரதிபலித்தார். ஏக்தாவின் இந்த தனித்துவமான முயற்சியில் உடல் உழைப்பு மற்றும் கலையை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் ஆன்மிக அனுபவமாகவும் மாற்றினார்.
ஏக்தா கூறுகையில், ‛‛நான் துர்கா தேவியின் ஒவ்வொரு வடிவத்தையும் ஆய்வு செய்து, செய்ததில் மகிழ்ச்சி. ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு தனித்துவமான கதை மற்றும் பெருமை உள்ளது. மேலும் அவை அனைத்தும் ஒரே மாதிரியாக பகலில் வழங்குவது சவாலான விஷயம் என்றாலும் எனக்கு திருப்திகரமான அனுபவமாக இருந்தது.
நவராத்திரியின் போது கர்பா விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த விழா எனது இதயத்திற்கு நெருக்கமானது, இந்த அனுபவத்திற்குப் பிறகு இந்த ஆண்டு கொண்டாட்டம் இன்னும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது'' என்றார்.