விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல | என் கேள்விக்கு இன்னும் எம்புரான் தயாரிப்பாளர் பதில் சொல்லவில்லை ; இயக்குனர் மேஜர் ரவி பதிலடி | ஹரிதாவின் ரிதம்! | டி.எஸ்.கே., 'சிக்ஸர்' அடித்த லப்பர் பந்து' | பிளாஷ்பேக்: ஓடாத படத்திற்காக பெற்ற ஊதியத்தைத் திரும்பத் தந்த 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன் | மார்ச் 27, 2026ல் வெளியாகும் 'பெத்தி' படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் அப்டேட் தந்த செல்வராகவன்! |
பழம்பெரும் ஹிந்தி பாடகர் சுரேஷ் வாட்கர் தனது பிறந்தநாளை மும்பையில் பத்திரிக்கையாளர்களுடன் பிரமாண்டமாக கொண்டாடினார். அதோடு புதிய வானொலி நிகழ்ச்சியான “ஏ ஜிந்தகி கேல் லகா லே” அறிமுகமும் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சுரேஷ் வாட்கரின் மனைவி பத்மா வாட்கரும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சுரேஷ் வாட்கர் தனது இனிமையான குரலில் "சத்மா" திரைப்படத்தின் "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற எவர்கிரீன் பாடலை பற்றி பேசினார். மேலும் அந்த பாடலின் உருவாக்கம், பதிவும் பற்றியும் நினைவு கூர்ந்தார். இதன்மூலம் முதன்முறையாக ரேடியோ நிகழ்ச்சியில் சுரேஷ் வாட்கர் கலந்து கொள்கிறார். இந்த புதிய பயணத்தால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.
தீபாவளி வரை ஒளிபரப்பாகும் இந்த வானொலி நிகழ்ச்சி ஒரு இசைப் பயணமாக இருக்கும். அதில் சுரேஷ் வாட்கர் தனது நினைவுகளிலிருந்து கேட்காத சில கதைகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளார். அதாவது அவரின் வாழ்க்கை பயணம், சினிமாவில் பாடகராக வளர்ந்தது, பாடல்களின் பதிவு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்கிறார்.
1955ல் ஆக., 7ல் பிறந்த சுரேஷ் வாட்கர் ஹிந்தி சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் பாடல்களைப் பாடியுள்ளார். "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற வானொலி நிகழ்ச்சிக்காக அவரது ரசிகர்களும், இசை ஆர்வலர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.