லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயின் பேரன் மற்றும் ஹிந்தி நடிகருமான ஷிகர் பஹாரியாவும், ஜான்வியும் காதலிப்பதாக தொடர்ந்து செய்தி வந்தது. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்த போட்டோக்கள் ஏற்கனவே வைரல் ஆகின.
சில தினங்களுக்கு முன் தனது தந்தை போனி கபூர் தயாரித்துள்ள ‛மைதான்' படத்தின் சிறப்பு காட்சியில் ஜான்வி பங்கேற்றார். அவர் கழுத்தில் அணிந்த நெக்லஸில் 'ஷிகு' என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் ஷிகர் பஹாரியா உடனான தனது காதலை அவர் உறுதிப்படுத்தியதாக பாலிவுட்டில் பேசுகிறார்கள்.