ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை ஏற்கெனவே 'பி.எம்.நரேந்திர மோடி' என்ற பெயரில் தயாராகி வெளிவந்தது. ஓமங் குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் நரேந்திர மோடியின் வாழ்க்கை மற்றுமொரு படமாக தயாராகிறது. முந்தைய படத்தில் அவரது பால்ய கால வாழ்க்கை முதல் அரசியலுக்கு வருவது வரையிலான வரலாற்றை கொண்டது.
இந்த படம் அவர் பிரதமரான பிறகு செய்த சாதனைகளை மையமாக கொண்டு உருவாகிறது. குறிப்பாக சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது, பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி அறிமுகம், அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை போன்ற முக்கிய நிகழ்வுகள் படத்தில் இடம்பெற இருக்கின்றன.
சி.எச்.கிராந்தி குமார் இயக்கும் இந்த படத்துக்கு 'விஸ்வநேதா' என்று டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. அபய் தியோல், நீனா குப்தா, அனுபம் கெர், பல்லவி ஜோஷி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். எம்.எம்.கீரவாணியின் மகன் கால பைரவா இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. நரேந்திர மோடியாக நடிக்க நடிகர் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.