இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவருக்கு ரீனா தத்தா, கிரண் ராவ் என இரண்டு மனைவிகள். இவர்கள் இருவரையும் இவர் விவாகரத்து செய்து விட்டாலும் அவர்களுடன் சுமூகமான நட்பையும் உறவையும் பேணி வருகிறார். இந்த நிலையில் அமீர்கான், ரீனா கத்தா தம்பதியின் மகளான இரா கானுக்கும் அவரது நீண்ட நாள் காதலரான நூபுர் சிகாரே என்பவருக்கும் கடந்த ஜனவரி 3ம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றது. இதை அடுத்து ஜனவரி 5ம் தேதி உதய்ப்பூரில் இவர்களது திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் நவராத்திரி பாரம்பரிய சேலைகளை அணிந்திருந்தனர். இதையடுத்து மணமகன் குடும்பத்தாரை கவுரவப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவும் தனது இரண்டு முன்னாள் மனைவிகள் உட்பட தனது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அனைவரையும் அதேபோன்று நவராத்திரி புடவைகளை அணிந்து விழாவில் கலந்து கொள்ள செய்துள்ளார் அமீர்கான். மணமகன் குடும்பத்தினரைப் போலவே அமீர்கான் குடும்பப் பெண்களும் இப்படி உடை அணிந்து இருந்தது இந்த திருமண நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் ரொம்பவே ஆச்சரியப்பட வைத்தது.