லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் ஜூனியர் மெஹ்மூத். கேரவன், மேரா நாம் ஜோக்கர், ஹாத்தி மேரே சாத்தி, கட்டி பட்டாங், கேரவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
67 வயதான ஜூனியர் மெஹ்மூத் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மும்பையில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மெஹ்மூத்தின் மறைவுக்கு இந்தி திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனது மரணத்தை முன்பே உணர்ந்த மெஹமூத் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை கடந்த சில நாட்களாக சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.