படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கூமர்'. முன்னதாக ஒரு பேட்டியில் இந்திய இளைஞர்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அபிஷேக், ‛‛சமூகம், கலாச்சாரம் எல்லாம் மாறி வருகின்றன. இன்றைய காலத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறைவே. என்னால் என் பெற்றோரை விட்டு தனியாக வாழ்வதை நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த வயதில் பெற்றோரை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். கடவுள் அருளால் என் பெற்றோர் இன்னும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக உள்ளனர். கூட்டு குடும்பம் என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். ஒருவேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, சிரித்து பேசி மகிழ வேண்டும். 47 வயதில் நான் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருப்பது என் அதிர்ஷ்டம்'' என்றார்.