எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
ஹாலிவுட் சினிமாவில் எப்போதுமே எழுத்தாளர்களுக்கு மதிப்பு உண்டு. இயக்குனர்கள் கதை எழுதுவதில்லை. எழுத்தாளர்களின் கதையை, அல்லது நாவலைத்தான் பெரும்பாலும் படமாக்குவார்கள். ஹாலிவுட்டில் எழுத்தாளர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதை, திரைக்கதை எழுத தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு ஹாலிவுட் எழுத்தளார்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த போராட்டத்துக்கு ஹாலிவுட் நடிகர் கூட்டமைப்பும் ஆதரவு தெவித்துள்ளது. இந்த அமைப்பில் நடிகர் நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இதனால், கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமா வட்டாரமும் ஸ்தம்பித்து காணப்படுகிறது. படப்பிடிப்புகளை தவிர சினிமா நடிகர், நடிகைகள் யாரும் டப்பிங், நடனம், இசை போன்ற எந்த திரைப்பட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு முன்னணி நடிகர்கள் மெரில் ஸ்ட்ரீப், ஜெனிபர் லாரன்ஸ், மெட் டேமன், புளோரன்ஸ் பக், ரம் மலெக் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: ஹாலிவுட் எழுத்தாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். நமது ஒற்றுமை, நமக்கான சிறந்த நாளை நிச்சயம் உருவாக்கும். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தில் நடிகர், நடிகைகளும் இணைந்துள்ளதால் சினிமா, வெப் தொடர் போன்ற பணிகள் அனைத்துமே பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் கடந்த 63 ஆண்டுகளில் முதன் முறையாக ஹாலிவுட் முடங்கும் சூழல் உருவாகி உள்ளது.