இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் அனிமல். இந்த படம் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி டியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தை டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளிவந்த முன்னோட்ட வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
ஏற்கனவே இந்த வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி அன்று இப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் டிசம்பர் மாதத்திற்கு இந்த படம் தள்ளிப்போகிறது என்று தகவல்கள் பரவியது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் இந்த படம் டிசம்பர் 1ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.