கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் |

பிரபல பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல். 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்ரி, நரமிம்மடு, பரம் வீர் சக்ரா, அகத்தியர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தில் நடித்தார். தற்போது மிஸ்ட்ரி ஆப் டாட்டூ, கதார் 2 படங்களில் நடித்து வருகிறார். இந்தி பிக்பாஸ் 13வது சீசனில் கலந்து கொண்டார்.
அமிஷா தனது நண்பர் குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்து அதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் 2.5 கோடி கடன் பெற்றார். படம் திரைக்கு வரும்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறியிருந்தார்.ஆனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்காக வட்டியுடன் சேர்த்து 3 கோடிக்கு அமிஷா செக் கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜய்குமார் ராஞ்சி நீதிமன்றத்தில் அமிஷா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமிஷா பட்டேலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் அமிஷா பட்டேல் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் அவர் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.