ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான திரிஷ்யம் படம், அதன் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக திரிஷ்யம் 2 என்கிற பெயரிலும் வெளியாகி முதல் பாகத்தைப் போலவே வெற்றி பெற்றது. அதேபோல திரிஷ்யம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் மற்ற மொழிகளைப்போல ஹிந்தியில் பெரிய வரவேற்பை பெற தவறியது. அதேபோல இதன் இரண்டாம் பாகம் தெலுங்கில் மட்டும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஹிந்தியில் திரிஷ்யம்-2 படம் ரீமேக் செய்யப்பட்டு கடந்த வெள்ளியன்று வெளியானது.
இந்த இரண்டாம் பாகத்தை அபிஷேக் பதக் என்பவர் இயக்கியிருந்தார். ஆச்சரியமாக இந்த இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாள் 15 கோடி வசூலித்த இந்த படம் வார நாட்களில் காட்சிகள் அதிகரித்து மூன்று நாட்களில் 60 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷ்யம் படத்தின் முதல் பாகம் பெரிய வரவேற்பைப் பெறாததால் கொஞ்சம் வருத்தத்தில் இருந்த அஜய் தேவன், இந்த இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். முதல்பாகத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா, போலீஸ் அதிகாரியாக நடித்த தபு உள்ளிட்டோர் இந்தப்படத்திலும் அதே கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.