லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இந்த ஆண்டு பல நடிகைகள் அம்மாவாகி உள்ளார்கள். பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு அம்மாவாகி இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் பாலிவுட் நடிகை ஆலியாபட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று இன்னொரு பாலிவுட் நடிகையான பிபாஷா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான பிபாசாபாசு 2016ம் ஆண்டு கரண்சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பிபாஷா கர்ப்பமாக இருப்பதாக அவர் புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்தான் நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிபாசாபாசுவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த தகவலை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிபாஷா பாசு தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.