மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா, தேசப்பற்று மிக்க நடிகையும்கூட. அடிக்கடி அவர் கூறும் சமூக மற்றும் அரசியல் கருத்துகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய சக்தியாக மாறுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நான் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று கங்கனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 2024 தேர்தலில் போட்டியிட நான் தயார். என் எண்ணங்களோடு ஒத்துப்போகிற பாஜக சீட் கொடுத்தால் அதற்கு நான் தயார். ஏனெனில் அனைத்து வகையான பங்கேற்பையும் விரும்புபவள் நான். கடினமாக உழைக்க கூடிய மற்றவர்களும் இது போன்ற பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும். இமாச்சல பிரதேச மக்கள் விரும்பி எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி, கங்கனாவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்க முன்வந்தபோது அதனை கங்கனா மறுத்தது குறிப்பிடத்தக்கது. அவர் மக்கள் மூலம் பார்லிமென்ட் செல்லவே விரும்புவதாக கூறுகிறார்கள்.