ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்குத் திரையுலகத்தின் தற்போதைய முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் 'வாரிசு' படம் வெளிவந்த பின் தான் இங்கு அவருக்கான இடம் எப்படி அமையும் என்பதும் தெரியும். கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் அவருக்கு சிறந்த அறிமுகமாக அமையவில்லை என்பதே அதற்குக் காரணம்.
ஹிந்தியில் ராஷ்மிகா கதாநாயகியாக அறிமுகமான 'குட் பை' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. ஒரு குடும்பப் படமாக எமோஷனலாக இருக்கிறது என விமர்சகர்களும், ரசிகர்களும் குறிப்பிட்டாலும் படத்தின் வசூல் மிக மோசமாகவே அமைந்துள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு கோடிக்கும் குறைவாக 90 லட்சம் மட்டுமே இந்திய வசூலாகப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.
'புஷ்பா' படம் மூலம் பாலிவுட்டில் பிரபலமான ராஷ்மிகா, அமிதாப் பச்சன் ஆகியோர் இருந்தும் 'குட் பை' படத்தின் வசூல் இப்படி இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். இத்னைக்கும் 'குட் பை' படத்தின் டிக்கெட் கட்டணம் 150 ரூபாய் என்று மட்டுமே நிர்ணயிக்கப்பட்டும் ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவில்லையாம்.
செப்டம்பர் 30ல் ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் நடித்து வெளிவந்த 'விக்ரம் வேதா' படமும் 10 நாள் ஆகியும் 100 கோடிக்குத் திண்டாடுகிறது. இந்த வாரம் வெளியான முக்கிய படமான 'குட் பை' படத்தின் வசூலும் சரியாக இல்லை என்பது பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.