நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இந்த நிலையில் இந்த படம் இதே பெயரில் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ளது. தமிழில் இயக்கிய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கி உள்ளனர் இன்று (செப்-3௦) இந்த படம் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் இயக்குனர்களில் ஒருவரான புஷ்கரிடம், பொன்னியின் செல்வன் படமும் இதே தேதியில் ரிலீஸ் ஆகிறது அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரிய படம்.. அதை எங்களால் பீட் பண்ண முடியாது. நாங்கள் அனைவரும் சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கப் போகிறோம். எப்படியும் சனி ஞாயிறுகளில் எங்கள் படத்திற்கு கூட்டம் நிச்சயம் வரும் என்று கூறினார்.
அவர் நாங்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் படத்தை இணைந்து பார்ப்போம் என்று சொன்னபோது ஹிருத்திக் ரோஷனின் முகம் சட்டென மாறி புஷ்கரை திரும்பி டென்சனுடன் ஒரு பார்வை பார்த்தார்.. அதன்பிறகு ஹிருத்திக் ரோஷன் பேசும்போது, “நான் இன்னும் அந்த நாவலைப் படிக்கவில்லை.. ஜஸ்ட் இப்போதைக்கு எனக்கு தெரிந்தது விக்ரம் வேதா மட்டும்தான்” என்று விறைப்பாக பேசியதிலிருந்து புஷ்கரின் பேச்சை அவர் ரசிக்கவில்லை என்பதை நன்றாகவே உணர முடிந்தது.