ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல பாலிவுட் தொலைக்காட்சி நடிகை சோனாலி போகட். தூர்தர்சனில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர், தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். தவிர, வெப் தொடரிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அறிவித்தனர். இது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சோனாலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது சகோதரரும், சகோதரியும் புகார் கூறியுள்ளனர். சோனாலியின் மரணத்திற்கு பின்னால் சதி திட்டம் உள்ளது. அவரது மரணத்திற்கு முன்னால் நடந்த இரவு விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
எனினும், சோனாலியின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் இல்லை என போலீசார் கூறியுள்ளனர். இதுபற்றி கோவா டி.ஜி.பி. ஜஸ்பால் சிங் கூறும்போது, “இதுவரை எங்களுக்கு சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் தென்படவில்லை. பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே என்ன விவரம் என்பது தெரிய வரும் என கூறியுள்ளார்.
சோனாலியின் கணவர் சஞ்சய் கடந்த 2016ம் ஆண்டு பண்ணை வீட்டில் இருந்தபோது, மர்ம மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை சோனாலி மறைவு இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.