காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
அமேசான் ப்ரைம் வீடியோவில் ' தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆப் பவர் எனும் தொடரின் பிரிமியர் காட்சி செப்டம்பர் 2ம் தேதி முதல் வெளியாகிறது. இந்தத் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த தொடரில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன் பேசியதாவது: ஒரு ரசிகனாக இதனை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்கும் லார்ட் ஆப் தி ரிங்ஸுக்கும் இடையே சிறிய தொடர்பு இருக்கிறது. இது பலருக்கும் தெரியாது. இந்த தொடரின் முழு தொகுப்பையும் பார்த்துவிட்டு என் தந்தை என்னை அழைத்தார், இதுபோன்ற ஒன்றை நாமும் உருவாக்க வேண்டும் என்றார். 'கொய் மில் கயாக்வை உருவாக்கினோம். இதன் மூலமாகவே கிரிஷ் பிறந்தார் என்றார்.