ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஹிந்தியில் அமீர்கான், நாகசைதன்யா இணைந்து நடித்துள்ள படம் லால் சிங் சத்தா. இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும், நாகசைதன்யா நடித்திருப்பதால் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பை சிரஞ்சீவி வெளியிடுகிறார்.
இந்நிலையில், தெலுங்கு பதிப்பின் பிரமோஷனின் ஒரு பகுதியாக ஊடகத்திற்காக அமீர்கானை நாகார்ஜூனா பேட்டி காணப்போகிறார். இதில் நாகசைதன்யாவும் கலந்து கொள்கிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தேர்ச்சி பெற்றவரான நாகார்ஜூனா, லால் சிங் சத்தா படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் தொலைக்காட்சி பேட்டியாளராகவும் மாறியுள்ளார். இப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ள அமீர்கானின் நண்பராக நாகசைதன்யா நடித்துள்ளார். இது அவர் ஹிந்தியில் நடிக்கும் முதல் படமாகும்.